மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் (காணொளி)

யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டு உயிர்த்த தினமான இன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன

குறித்த ஆராதனை நிகழ்வுகள் மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற இந்த பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டதுடன், இதன்போது திருஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் யேசுவின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன், நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.

இதேவேளை விசேட திருப்பலியும் ஆயரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசனும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் (காணொளி)

Read More