சாராய தொழிற்சாலை பற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு விளங்கவில்லையாம் (காணொளி)

மக்களின் எதிர்ப்பைத் தாண்டி, எவ்வித அனுமதியுமின்றி கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து ஜனாதிபதியையும் பிரதமரையும் தெளிவுபடுத்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படும் மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் 19 ஏக்கர் காணியை ஒதுக்கி, அதில் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் பல தடவைகள் செய்திகள் வெளியாகி இருந்தன 

மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் படி, அதன் தலைவராக அர்ஜூன் அலோசியஸ் செயற்படுகின்றார்.

அவர் மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராவார்.

மத்தளையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல், மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

  புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 15 நிராஜ் டேவிட்

Read More