தமிழருக்குச் சொந்தமான நிலங்களின் ஆளுகையினைப் பாதுகாக்கும் பிரதிநிதியாகச் செயலாற்றுவேன் -

தமிழருக்குச் சொந்தமான நிலங்களின் ஆளுகையினைப் பாதுகாக்கும் பிரதிநிதியாகச் செயலாற்றுவேன் - வேட்பாளர் ஜீ.சௌந்தரராஜா மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதியிலுள்ள செல்வாநகர் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் (04.08.2015) உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் கு.சௌந்தரராஜா அவர்கள் எதிர்காலத்தில் தான் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் மட்டக்களப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பாதுகாப்பதற்காகச்; செயற்படுவேன் என உறுதிமொழி வழங்கினார். கடந்த காலங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகள் அவர்களின் ஆளுகையிலிருந்து விடுபடுவதனைக் காண முடிகின்றது. தமிழர்களின் நிலங்கள் உத்தியோக பூர்வமாகவும் உத்தியோகப் பற்றற்ற விதத்திலும் தமிழர்களின் ஆளுகையிலிருந்து செல்வதைத் தடுப்பதற்குப் பொருத்தமானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அதுபோல் நிலம் நமது ஆளுகையிலிருந்தால் தான் நமது பண்பாடுகளைக் கட்டிக்காக்க முடியும். இதற்கு அரசியல் அதிகாரமுள்ள பிரதிநிதித்துவம் தேவையாகவுள்ளது. எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்குமாகவிருந்தால் தமிழர்களின் ஆளுகைக்குரிய நிலங்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டங்களை என்னால் நிச்சயமாக தொடங்க முடியும். எனத் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது....?

Read More