ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழந்துவருவதாக யோகேஸ்வரன் எம்பி தெரிவித்த

நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரண்டு வருடங்களான நிலையில் புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்குப் பெரிதாக எதுவும் கிடைத்ததாக கூறுவதற்கில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் காணிகள் சில இடங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய ஆட்சியில் காணி சுவீகரிப்பு மற்றும் பெரும்பான்மையின மக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நீண்ட காலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை இனப் பிரச்சினைக்கான தீர்வையோ அல்லது அதிகாரப் பகிர்வையோ நினைத்துப் பார்க்க முடியாத நிலைமையே தற்போது காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர்கள் கூட முன்னுக்குப் பின், முராணான கருத்துக்களைத் தெரி விக்கும் நிலைமையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பன தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,இதற்கு எதிரான கருத்துகளை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சில அமை ச்சர்கள் தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்









கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 119வது ஆண்டு நிறைவு தின விழா

Read More