நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் தரம் (1) மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(க.விஜயரெத்தினம் )
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் தரம் (1)ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை (11.1.2017) காலை 09.31 மணியளவில்  அதிபர் நா.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளரும்,பாடசாலை மேம்பாட்டு திட்டப்பொறுப்பாளருமான வீ.ரீ.சகாதேவராசா பிரதம அதிதியாகவும் ,மற்றும் பிரதியதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது  28 புதிய மாணவர்களையும் மலர்மாலை அணிவித்து அதிகளுடன் வரவேற்றார்கள்.தரம் ஒன்று மாணவர்களுக்கு இனிப்புக் கொடுத்து வித்தியாரம்ப நிகழ்வு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்துகொண்ட உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.ரீ.சகாதேவராசா பேசுகையில்:-காலத்தின் தேவையாக கல்வி பேசப்படுகின்றது.இக்கல்வியை மாணவர்கள்  சிறப்பாக கற்கவேண்டும்.அப்போதுதான் நாம் சமூகத்தில் நல்ல பிரஜையாக மிளிர்வோம்.சமூகம் எதிர்பார்க்கும் விளைச்சளை பாடசாலைகள் வழங்கவேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களுடன் கூட்டுச்சேர்ந்து கற்றல் கற்பித்தலை விரைவுபடுத்த வேண்டும்.அர்பணிப்புள்ள ஆசிரியர்பணி காலத்தின் தேவையாக இருக்கின்றது தெரிவித்தார்.

  

  

  

  

முதலமைச்சரின் உறுதி மொழியையும் ஏற்கமறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்

Read More