கிழக்கு மாகாணத்தில் 13ஆம் திகதி பாடசாலைக விடுமுறை

எதிர்வரும் 13ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

13ஆம் திகதிக்கான பாடசாலைக்கான பாடசாலை நாள் பிரிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியை தொடர்புகொண்ட கோவிந்தன் கருணாகரம் இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த கல்வி அமைச்சு ஆராய்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உத்தியோகபுர்வமாக அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

Read More