மெல்பேனில் நடைபெறும் தைத்திருநாள் நிகழ்வு விபரங்கள்!!

தமிழர் திருநாள் ஆகிய ”தைப்பொங்கல் விழா – 2017” கடந்த வருடங்களைப்போல், இவ்வருடமும் “சுருதி லயா East West இசைக்கல்லூரியின்“ ஆதரவுடன் மெல்பேண் வாழ் வடபகுதி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நடாத்தும் தைப் பொங்கல் விழா – 2017 கொண்டாடவுள்ளோம்.

தமிழர் தைத்திருநாள் பண்டிகையை கொணடாடுவதுடன், எமது இளம் தலைமுறையினருக்கு தமிழர் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை விளக்குவதும் இதன் நொக்கமாகும், தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வாக திறந்த வெளிப்பூங்காவில் தமிழர் பாரம்பரிய முறையில் பொங்கலும், அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியவிளையாட்டுக்களும் நடைபெற இருக்கின்றது. இந்த பண்டிகையில் சிறியோர் முதல் பெரியோர் வரை, பங்குபற்றி விழாவினை சிறப்பிக்குமாறு பணிவன்புடன்அழைக்கின்றோம்.

காலம் :- ஞாயிற்றுக்கிழமை  15.01.2017

நேரம் - காலை 09.00 மணி  - அனுமதி இலவசம்.

இடம் :- Norris Bank Parklands, 135. Mcleans Road. Bundoora.

இந்நிகழ்வில் அனைத்து தமிழ் அன்பர்களையும், தமிழர் பாரம்பரிய உடைகளுடன் சமூகம் தரும் வண்ணம் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

Saththiyan 0403436970

  

  

  மாதமொன்றுக்கு 100 சவுதி றியால்கள் ; வருமான வரி அல்லாத புதிய வரி அறிமுகம்

Read More