கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் 1தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்குடா கல்வி வலய மட்/ககு/கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் தரம் 01ற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (11.01.2017) காலை அதிபர் திருமதி.வி.சந்திரபால அவர்களின் தலைமையில் இடைம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை அதிபர், ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் புதிதாக முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள், அப்பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்கள் சேர்ந்து வரவேற்றனர்.

மேலும் இந்நிகழ்வில் பாழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  

  

  

  

பாடும் மீன் சமரில் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை அணியினர் வெற்றி

Read More