வாழைச்சேனை வீரையடி விநாயகர் ஆலயத்தில் திருவெம்பாவை தீர்த்தம்

வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இவ்வருடத்திற்கான திருவெம்பாவை இறுதி நாள் தீர்த்தோற்சவம் புதன்கிழமை இடம்பெற்றது.திருவெம்பாவை விரதமானது கடந்த 02ஆம் திகதி அன்று ஆரம்பமாகி 10 நாட்களை கொண்ட பூசையாக இடம்பெற்று புதன்கிழமை தீர்த்தமாடும் பூசையுடன் நிறைவு பெற்றது.
இதன்போது திருவாதவூரர் அடிகளார் புராணம் பாடப்பட்டு விசேட இறுதி நாள் பூசைகள் இடம்பெற்றதுடன், திருபொன் சுன்னம் இடித்தல், அத்தோடு பத்துப் பாடல்கள் பாடப்பட்டது.

ஆலயத்தில் தீர்த்தமாடப்பட்டதுடன், திருப்பொன் ஊஞ்சல் ஆடும் விசேட பூசையும் இடம்பெற்றது. பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.சண்முகம் குருக்களினால் நடைபெற்றது.

  

  

  

  

  

எங்கள் தலைவர் பிரபாகரன் என்பதைச் சொல்ல எவரும் தயங்க வேண்டாம்; சிறீதரன்

Read More