மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!


மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அததுமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று அதனை நிறுத்துவதற்கான தடைஉத்தரவை நீதிமன்னத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும் அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதா அப்பகுதியில் தங்களது மாடுகளை மேய்க்கும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் (10) மாடுமேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்ணையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகைதந்த அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகைதந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து குறித்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக  தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் 10 இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள். குறித்த சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன் (11) திகதி பொலீசில் முறைப்பாடு செய்யவுள்ளதாக  அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவைத்திருந்தவர் கைது

Read More