அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திரும்வெம்பாவையை முன்னிட்டு திருவாசக முற்றோதல் இன்று காலை ஆரம்பமானது.

திருவாசகத்திற்கு உருகாதோர் யாரும் இல்லையென்று போற்றப்படும் இந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு மாவட்டத்தின் சைவத் திருநெறி மன்றத்தினால் அதன் தலைவர் சித்தாந்த வித்தகர் எஸ்.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.


நாளைய தினம் அதிகாலை 4.00 மணிக்கு நடராஜருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆருத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பத்து தினங்களாக நடைபெற்றுவரும் திருவெம்பாவை உற்சவத்தில் ஆன்மீகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். திரும்வெம்பாவைப் பெருவிழாவினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

நிரந்தர தீர்வுக்கு இந்த அரசாங்கமேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அமல் பா.உ

Read More