முதலமைச்சரினால் 30 வருடங்களாக உறுதிப்பத்திரமில்லாத 130 குடியிருப்பாளர்களுக்கு பத்திரங்கள்

13 ஆவது அரசியலமைப்பில் காணி அதிகாரம் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், அந்த யதார்த்தத்தை ஒருபோது  விட்டுக்கொடுக்கக்கூடாது  எனவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  தெரிவித்துள்ளார்.

நாட்டில்  இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும்  அபிவிருத்தி  என்பவற்றை  விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.     


திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபைகளிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 30 வருடங்களாக உறுதிப்பத்திரமில்லாத 130 குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள்  இன்று வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி தலைமையில் திருகோணமலை குளக்கோட்டன் நூலக கேட்போர் கூட  மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று  உரையாற்றிய  கிழக்கு மாகாண முதலமைச்சர், இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவில் எட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

 

  

  

  கேவலமான அரசியல் கலாசாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்

Read More