கதாநாயகன் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை இலங்கையிலும் பணிகளை ஆரம்பிக்கின்றது

பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை அமைப்பு ஸ்ரீலங்காவிலும் தமது பணிகளை விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கல்வி கல்வி ரீதியான உதவிகளை வழங்கி வரும் நடிகர் சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை வருடாந்த ஒன்று கூடல் தமிழகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு அந்த அமைப்பின் அழைப்பிற்கு இணங்க ஸ்ரீலங்கா கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக்கொண்டார்.

இதன்போது இந்த அமைப்பின் செயற்பாடுகளை ஸ்ரீலங்காவிலும் விஸ்தரிப்பது தொடர்பில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கல்வி இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.

இது தொடபாக ஆராய்வதற்காக இந்தியாவில் இருந்து குழு ஒன்று ஸ்ரீலங்காவிற்கு வருகைத்தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகரம் அறக்கட்டளை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி நடிகர் சூர்யாவால் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதுசரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசதியற்ற மாணவர்கள் இந்த அமைப்பின் பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

  

  மட்டக்களப்பு பிரதேசங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்

Read More