துறைநீலாவணை பிரதான வீதியில் கோழிக்கழிவுகள்

துறைநீலாவணை பிரதான வீதியில் இன்று(10.1.2017) அதிகாலைவேளையில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளது.மருதமுனையைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர்களினால் சேகரிக்கப்படும் கழிவுகளை மூடைகளாக பொதியிடப்பட்டு துறைநீலாவணை வீதியில் பந்தம் கொடுத்து வீசிவருகின்றார்கள்.

இதனால்பயணிக்கும் பொதுமக்கள் தொடர்ச்சியாக தூர்நாற்ற வாடையை சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு துறைநீலாவணை பொதுமக்கள்,அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக  முகம் கொடுத்து வருகின்றார்கள். இச்சம்பவம் துறைநீலாவணை  வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கின்றது.இதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியவர்கள் யார்...? கல்முனை மாநகசபை ஆணையாளர்,கல்முனை பொலிசார், சுகாதார வைத்திய அதிகாரி,ஆகியோர்கள்  ஏன்  வாய்மூடி மௌனிகளாக ஏன் இருக்கின்றார்கள்...? என துறைநீலாவணை பொதுமக்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் அங்கலாய்ப்பு செய்கின்றார்கள்.

இந்த விடயமாக கல்முனை மாநகரசபை ஆணையாளர் கோழிக்கடை உரிமையாளர்களுக்கு சுகாதார விடயரீதியான அறிவுறுத்தல்கள், சுற்றாடல் சட்டங்கள்,என்பனவற்றை இவர்களுக்கு வழங்கவில்லையா..? இதுசம்பந்தமாக சட்டநடவடிக்கையை துரிதப்படுத்தி கல்முனை பிரதேசத்தின் சுற்றாடல் புனிதத்தன்மை பேணவேண்டும். அவ்வாறு கல்முனை மாநகசபை செய்யாவிட்டால் துறைநீலாவணை பொதுமக்கள்,சங்கங்கள்,சபைகள் ஒருமித்து பாரியதொரு கவயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் வாரங்களில்  மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர், தெரியப்படுத்தப்படும்.

  

  

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா வேள்விக்கான வேலைகள் ஆரம்பம்

Read More