கிழக்கில் பேரழிவை சந்தித்த பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் அமெரிக்கா

ஸ்ரீலங்காவின் உள்ளூர் சமூகத்திற்கு பேரழிவை எதிர்கொள்ளக்கூடிய சுத்தமான குடிநீரை வழங்கும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் வரட்சி, மற்றும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிக்கு குடிநீரை வழங்கும் வகையில் யுஎஸ் எய்ட் (USAID) அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஓரு விஸ்தரிப்பாகவே இந்த திட்டம் அமைந்துள்ளது.

“நாளாந்தம் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்காவின் குடும்பங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த சுத்தமான குடிநீரை வழங்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார்.

இந்த திட்டததின் கீழ மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டிகளை அமைத்தல், குழாய் மூலம் குடிநீரைபெறுவதற்கான வசதிகளை வழங்குதல், வெள்ளம் மற்றும் வரட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக உளளூர் உட்கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்தல் போன்ற திட்டங்களும் அடங்கியுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பேரழிவுடன் தொடர்புபட்ட நீர் மற்றும் சுகாதார தேவைகளிற்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்கு உள்ளூர் சமூகங்களிற்கு இந்த திட்டம் உதவும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வடக்கிற்கு மேலதிகமாக இந்த திட்டம் தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களை சந்தித்துவரும் ஊவா மாகாணத்தையும் இலக்காக கொண்டு செயற்படுத்தப்படவுள்ளது.

1956 ஆண்டு முதல் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அரசாங்கத்தின் முகவர் நிறுவனம் ஸ்ரீலங்கா வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இணைந்து பணியாற்றி வருவதுடன், விவசாயம், வர்த்தக அபிவிருத்தி, சுகாதாரம், எரிசக்தி, இயற்கைவளங்கள நல்லாட்சி, மற்றும் மனிதாபிமான உதவி போன்ற துறைகளில் 2 பில்லியன் டொலர்களிற்கு மேல் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

  

  

  த.தே.கூ என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான். ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது.

Read More