மாவீரர்களது சமாதியைக் கட்டுவதற்காக எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் என்ன?

கிளிநொச்சியில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தமை வெறுமனே அரசியல் இலாபத்திற்காகவே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவீரர் தினத்திற்கு எந்த எதிர்ப்பும் வெளியிடாத அரசாங்கம், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் மாவீரர்களுக்கான சமாதியைக் கட்டுவதற்காக எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தியதற்கான காரணம் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி சிவநகர் கிராமத்தில் சனசமூக நிலையம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பு சர்வதேசத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களிடையே இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரிலேயே தான் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியதைப் போன்றே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் தற்பொழுதைய மைத்திரி – ரணில் அரசாங்கமும் கூறிவருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு எதனையும் செய்வதற்கு விரும்பினாலும், எதனையும் செய்ய முடியாத நிலைமைக்கு நாங்களே அவர்களை தள்ளுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

  

  

  

  

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்விக் கருத்தரங்கு.

Read More