ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு

கல்குடாத் தொகுதியிலுள்ள ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு மற்றும் வாழைச்சேனை, கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளுக்கும் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் (Tractor) வழங்கி வைக்கப்பட்டன.  

இரு பிரதேச சபைகளுக்கும் இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வானது 2017.01.07-சனிக்கிழமை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றதோடு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட், கெளரவ அதிதியாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோர் கலந்துகொண்டு பிரதேச சபைகளின் செயலாளர்களான ஜே. சர்வேஸ்வரன் மற்றும் எஸ்.எம். சிஹாப்தீன் ஆகியோரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்ரவேல்,  
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், முன்னாள் உறுப்பினர் ஐ.டீ. அஸ்மி ஆகியோரும் பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

  

  

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்த

Read More