மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் உதயம்!

மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புக்கு அமைய(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் அமைப்புக்கான இடைக்கால நிர்வாகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்திற்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ம் திகதிவரை இயங்கும் என்றும் அதன் பின்னர் மேலும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஒன்று அமைக்கப்படுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய 21 பேர் அடங்கிய தற்காலிக மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் தற்காலிக தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன் ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கான யாப்பு ஒன்றிணை உருவாக்குவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டன.

மத்திய குழு உறுப்பினர்கள் வைத்தியர் எம்.முருகமூர்த்தி(மட்டக்களப்பு வைத்திய நிபுணர்) பேராசிரியர் ஜெ.கனடி(கிழக்குப்பல்கலைகழக விரிவுரையாளர்) வைத்தியர் கே.இ.கருணாகரன்(மட்டக்களப்பு வைத்திய நிபுணர் விரிவுரையாளர்) கே.குருநாதன்(கணி நிபுணத்துவ ஆலோசகர் முன்னாள் காணி ஆணையாளர்) எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி) வி.மகேந்திரநாதன் எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்) வி.கிருஸ்ணகுமார்(ஊடவியலாளர்) எ.இருதயநாதன் பா.பரசுராமன் எஸ்.சிவயோகநாதன் எஸ்.கணேசலிங்கம் பி.முரளிதரன் கு.ஜெகனீதன் எஸ்.ராஜன் கே.விநாயகமூர்த்தி எஸ்.பரமானந்தன்(ஒலியன் மாற்றுதிரனாளிகள் அமைப்பு) ஆர்.ருத்திராதேவி பா.ராகினி பி.சிறானி எஸ்.சோமாவதி பாலகங்கேஸ்வரி தற்காலிக நிர்வாகம் தலைவர் - எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி) செயலாளர் - எஸ்.ராஜன் பொருளாளர் - எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்) ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பது என்றும் மாவட்டத்தில் பரிபோய்கொண்டிருக்கும் காணி அபகரிப்பை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது எனவும் கல்வி பொருளாதரம் உரிமை சம்பந்தமான விடயங்களில் ஒன்றியம் கவனம் செலுத்தவேண்டுமெனவும் மாவட்டத்தில் உள்ள ஏனைய அமைப்புக்களையும் எதிர்காலத்தில் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்படுவது எனவும் ஒன்றியத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் செயாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

  

  

  

  

  

தனியார் மருந்தகங்களில் குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ள தடை !

Read More