படுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள மாணவர்கள் (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ப.ஹாந்தரூபன் A 2,B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 வது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 161 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மற்றும் இளைஞர் விவசாயாயத்திட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்த க.மதிகரன் 3B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 5 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 184 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த பே.யசோகாந் B 2, 1 C சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 24 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 998 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் பா.பாரிதாஸன் 2 B,C சித்திகளைப் பெற்று மாட்ட மட்டத்தில் 11 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 459 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நான்கு மாணவர்களும் படுவான்கரையிலுள்ள பாடசாலைகயில் கல்விப் பொதுத்தர சாதாரணதரம் கற்று எழுவான்கரைப் பகுதியான மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரத்தில் கற்று நான்கு பேரும் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.

இந்த நான்கு மாணவர்களும் மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து கஸ்ட்டத்தின் மத்தியில் கற்று உயர் கல்வி கற்பதற்குத் தெரிவாகியுள்ளனர்.

இம்மாணவர்களின் உயர் படிப்புக்கு உரிய உதவிகளையும், அவர்கள் இவ்வேளையில் வேண்டி நிற்கின்றனர்.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்போரதீவுப்பற்றுப் பிரதேசம் தற்போது மெல்ல மெல்ல கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  

  

  

  

மட்டக்களப்பில் கிராமத்தை ஆக்கிரமிக்கும் கபாலிகள்

Read More