திருகோணமலையில் பல இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு!

திருகோணமலையில் 4 இடங்களில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த புத்தர் சிலைகள் மொரவெவே சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தியிலே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

மேலும், யார் புத்தர் சிலைகளை உடைத்தது என்பது தொடர்பாக இது வரை தகவல் இல்லை.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Read More