சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 (லியோன்)மட்டக்களப்பு  மண்முனை வடக்கு மற்றும் மண்முனை பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 07.01.2016  சனிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு   கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில்   2016  ஆம் ஆண்டு   பாடசாலை மட்டத்தில் பரீட்சையில்சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி   கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை 04 இன் முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில் 07.01.2016 சனிக்கிழமை  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில்  நடைபெற்றது  

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக   மட்டக்களப்பு  வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் திருமதி . இராஜகுமாரி கனகசிங்கம் மற்றும் மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி உபதிபர் மோகன் ஆகியோர்   கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை  விற்பனை  மேற்பார்வையாளர்கள் உத்தியோகத்தர்கள்  பாடசாலை  மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள்  கலந்து சிறப்பித்தனர் .

  

  

  

  

  

அம்பாறையில் 20 பேர்ருக்கு எயிட்ஸ் !

Read More