களுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலகத்தில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பெடுத்து 2 ஆம் ஆண்டு நிறைவு

இலங்கையின் ஜனநாயக சோயலியக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தினை பொறுப்பெடுத்து 2 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாகத்தில்  பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் பலநிகழ்வுகள்  8 ஆம்திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2 ஆம் ஆண்டினை முன்னிட்டு  ஆலயத்தில் விஷேடபூசைகள் பிரதேசசெயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் மரநடுகை மற்றும் சிரமதானம் என்பன இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதேசசெயலக ஊழியர்கள் கலந்துகொண்டதுடன் நல்லாட்சி தொடர்பான விளக்க உரையினை பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்

  

  

மட்டக்களப்பில் மாபெரும் மலிவு விற்பனை

Read More