இந்தியா பயணம் ! கிழக்கை சேர்ந்தவர்கள் மூன்று கிராம சேவை உத்தியோகத்தர்கள்பங்கேற்பு

இலங்கையிலிருந்து 34கிராம சேவை உத்தியோகத்தர்கள் இந்தியாவிற்கு விசேட பயிற்சியைப் பெறுவதற்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காகவும் ஏழுநாள் பயணத்தினை மேற்கொண்டு இன்று(08) இந்தியா சென்றடைந்துள்ளனர். இவர்களுள் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் உள்ளடங்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவினைச்சேர்ந்த கோ.பஞ்சாட்சரம், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்தினைச்சேர்ந்த திருமதி கணபதிப்பிள்ளை ஸ்ரீகந்தராசா, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவினைச்சேர்ந்த ப.அலெக்சாண்டர் ஆகியோரே கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் சென்றுள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்களிடையே 2014ம் ஆண்டு நடாத்தப்பட்ட முகாமைத்துவ போட்டியில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடம்பெற்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சினால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவுசெய்யப்பட்ட 34கிராமசேவை உத்தியோகத்தர்களே இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பிரதேசத்திற்கு சென்றுள்ள குறித்த கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு கிராமியமட்ட கற்கைநெறி பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

  

  

  

  

  

மட்டு அரசஉத்தியோகத்தர்களுக்கிடையிலான கலாசார போட்டி

Read More