துறைநீலாவணையில் மாபெரும் சிரமதான நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இன்றுடன்  இரண்டு ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு துறைநீலாவணை  கிராமத்தில் உள்ள விபுலானந்தா வித்தியாலயத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (8.1.2017) காலை 8.45 மணியளவில்  துறைநீலாவணை தெற்கு பிரிவுக்கான கிராம உத்தியோகஸ்தர் தினகரன்பிள்ளை கோகுலராஜ் தலைமையில் மாபெரும்   சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக்  கிராமத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிராமசேவை உத்தியோகஸ்தர் தி.கோகுலராஜ் அவர்களின் ஒருங்கிணைந்த தலைமைத்துவ நெறிப்படுத்தலுடன் ; ஜனாதிபதியின் பதவியேற்பு ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு , சிரமதான நிகழ்வு  துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் பெருந்தொகையான கிராம மக்கள்,மாதர் அபிவிருத்தி சங்கம்,அம்பிகை மகளீர் சங்கம்,துறைநீலாவணை முத்து மாரியம்மன் ஆலய பரிபாலனசபை, ஆகியோர்கள் கலந்து கொண்டு சிரமதானம்  இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வித்தியாலய முதல்வர் பூ.நவரெத்தினம்,கிராமசேவை உத்தியோகஸ்தர் வயிரமுத்து கனகசபை,பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகஸ்தர் வ.ரவி,துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தலைவர் நாகப்பன் மாணிக்கராசா, செயலாளர் சோ.சந்திரகுமார்,ஆசிரியர் சீ.பேராளன், மகளீர் சங்கத்தலைவி ரீ.விமலேஸ்வரி,மற்றும் மகளீர் சங்க ஆலோசகர் திருமதி தேன்மலர் பிபலானந்தம், உட்பட சுமார் 300 பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது பாடசாலை வாளாகம் துப்பரவு செய்யப்பட்டது.

  

  

  மின்வெட்டு அறிவித்தல்

Read More