மட்டக்களப்பில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு மாவட்ட சோட்டோக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலும் சோட்டோக்கான் கராத்தே சங்கத்தின் பிரதான பயிற்சியாளர் கே.ரி.பிரகாஸ் தலைமையிலும் அரசடியில் உள்ள சோட்டோக்கான் கராத்தே சங்க பாடசாலையில்(07) காலை நிகழ்வொன்று ஆரம்பமானது.

சர்தேச கராத்தே சம்பியனும் உலக கராத்தே சங்கத்தின் தலைவருமான பவல் பொம்பலோஸ்ஹி மற்றும் பிரித்தானிய சோட்டாக்கன் கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் இந்த பயிற்சிகளையும் போட்டிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.இதன் போது போட்டியில் கலந்து கொண்ட கராத்தே வீரர்கள், “வடகிழக்கினை பிரித்தாலும் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களை யாரும் பிரிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
 நாளைய தினம் காலை  மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் திறந்த கராத்தே போட்டிகள் நடைபெற உள்ளதுடன் பிற்பகல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிச் செயலாளர் க.பத்மராஜா, வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கராத்தே சங்கங்களின் பயிற்சியாளர்கள், சிரேஸ்ட வீரர்களே மற்றும் போட்டிகளில் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  

  

  

  

  

எமது செய்திக்கு மட்டக்களப்பு வைத்திய நிபுணர் உடநடிநடவடிக்கை?

Read More