மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவாநந்தா தேசிய பாடசாலை கணிதப்பிரிவில் சாதனை

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று அதிகாலை வெளியாகியுள்ள நிலையில் நாடெங்கிலும் அது பற்றிய பேச்சுக்களே அதிகளவு இடம்பிடித்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் கணிதப்பிரிவில் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை, ஐந்தாவது , ஆறாவது ,பத்தாவது மற்றும் பத்தொன்பதாவது நிலைகளில் சிவாந்தா மாணவர்கள் இடம்பெற்றுள்ளமை மாவட்டத்தில் பலரது பார்வையையும் பாடசாலையின்  பக்கம் திருப்பியுள்ளது.  

இதில் அனைத்துப் பாடங்களிலும் 3A சித்திகளைப் பெற்ற  திரு. நாகராஜன் கிருத்திகன் , திரு.சிவமுருகதாசன் கர்சன், மற்றும் திரு. பத்மநாதன் துஜிமயூரன் ஆகிய மூவரும் முறையே 1ம், 5ம், மற்றும் 6ம் இடங்களைப் பெற்றுள்ளதோடு 2A,B பெறுபேற்றைப் பெற்ற திரு. வெற்றிவேல் கரிகரன் 10வது இடத்தைப்பெற்றுள்ளார். மாவட்டத்தில் 19வது நிலையினைப் பெற்றுக்கொண்ட திரு.பரராசசிங்கம் பிரியங்கன் A, 2B பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்க்கும் பெருமைசேர்த்துள்ளார்.  

மேற்படி உயரிய பெறுபேற்றைப் பெறுவதற்கு காரணர்களாகவிருந்து வழிப்படுத்தல்கள், ஆலோசனைகள் மற்றும் உயரிய கற்பித்தல்களை மேற்கொண்ட பெற்றோர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு சிவாநந்தா பாடசாலை பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் வாழ்த்துக்களையும் பாராட்டுதழ்களையும் தெரிவித்துக்கொள்கிறது. குறிப்பாக சிவாநந்தா பட்டமுன் மாணவர் சங்கத் தலைவர் கீ.பிருந்தன் மற்றும் உறுப்பினர்களுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  

சிவாநந்தாவின் கல்வி மேம்பாம்டில் வைத்திய கலாநிதி தெ.சுந்தரேசன் தலைமையிலான பழைய மாணவர் சங்கம் க.பொ.த உயர்தரத்திற்கென மேற்கொண்டுவரும் விசேட செயற்பாடுகள் குறிப்பிடும்படியான தாக்கத்தைச் பெறுபேற்றில் செலுத்தியிருக்கலாம் எனும் கருத்துக்களும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன.

  

  

  

  

  

மட்டக்களப்பு மேனுஷாவின் இலட்சியம்

Read More