மட்டக்களப்பின் பிரபல சமூகசேவையாளர் காலமானார்

(க.விஜயரெத்தினம் )
களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளரும்,தமிழ்தேசிய பற்றாளரும்,அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய  தேசமான்ய அமரசிங்கம்- சிவனேசராஜா இறைபதமடைந்துள்ளார். தேசமான்ய அமரசிங்கம் சிவனேசராஜா நேற்று (06.1.2017)வெள்ளிக்கிழமை   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.

ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த பிரபல சித்த ஆயுள் வேத வைத்தியரான காத்தமுத்து அமரசிங்கம் அவர்களின் புதல்வர்ஆவார். இவர் கொழும்பு, நீர்கொழும்பு, மற்றும் காலி, ஆகிய இடங்களில்  தொழில் நிமித்தம்  வசித்து வந்தபோது சிங்களமக்களோடு அன்பாகவும்,பண்பாகவும் நடந்துகொண்ட பெருந்தகை ஆவார்.இதனால்  சிங்கள மொழியில் புலமை பெற்று இருந்தமையினால் சகோதர இன சிங்கள மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தார். களுவாஞ்சிகுடி பிரதேச சிவில் பாதுகாப்புகுழுவில் இருந்து பொலிசார்,பொதுமக்களுடன் இணைந்து ஓந்தாச்சிமடம் கிராமத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்தி வீதிபுனரமைப்பு போன்றவற்றை முன்னெடுத்தவர்.மற்றவர்களுடன் நேர்மையாகவும்,அன்பாகவும் பழகி மக்கள் மனதை வென்றெடுத்த மனிதபிமானம் கொண்ட மக்கள் சேவகன் ஆவார்.பிரதேசத்தின் கலை,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதில் இவருடைய சமூகசேவை புத்துயிர் அளித்தது.சிறந்த ஆன்மீகப்பற்றுள்ளவர்.

அவர் வாழ்ந்த பிரதேசங்களில்; பல்வேறுபட்ட சமூக நலன்சார் பணிகளில் ஈடுபட்டதனால் அவரது சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கோடு இலங்கை சமாதான நீதவான்கள் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பின் சிபார்சினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கடந்த 2005.02.08 பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் தேசமான்ய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக ஓந்தாச்சிமடம் காளிகோயில் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஓந்தாச்சிமடம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அன்னாரின் இல்லத்திற்கு பொதுமக்கள்,பிரதேச செயலாளர்கள்,பொலிசார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபைஉறுப்பினர்கள் சென்று  அஞ்சலி செலுத்திவருகின்றார்கள்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

Read More