முஸ்லிம் பட்டதாரிகளுக்கு பயிற்சி செயலமர்வு

(எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு"எதிர்கால தலைவர்கள் " என்ற தொனிப்பொருளில் பயிற்சி செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பேரவையின் பொதுச் செயலாளர் அம்ஹர் எம். ஸரீப் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பட்டதாரி இளைஞர், யுவதிகளைப் பயிற்றுவித்து, அவர்களை சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்களை ஏற்கக் கூடியவர்களாகவும், உயர் பதவிகள் சிறப்பு பொருந்தியவர்களாகவும் உருவாக்கும் நோக்கில் பயிற்சிப்பட்டறை வழங்கப்படவுள்ளது.

எதிர்கால தலைவர்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இப் பயிற்சி செயலமர்வில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மேற்கொள்ளும் 20 வயதிற்கும் 26  வயதிற்குமிடைப்பட்ட முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இப்பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்ள முடியும்.

பங்குபற்ற விரும்பும் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 10 ம் திகதிக்கு முன்னதாக பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பப் படிவங்களை www.ymma.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்தும் அல்லது பிரதேசங்களின் வை.எம். எம். ஏ. கிளைகளிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளைகளின் பிரதேச விண்ணப்பதாரிகள் கிளைத் தலைவர்களின் 0772348508, 0750414196 என்ற கைப்பேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் வேண்டப்படுகின்றனர்.

தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரம் வரை அதிகரிக்க நடவடிக்கை

Read More