ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்கு பின்னாடியும் சில சோகங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்கு பின்னாடியும் சில சோகங்களும் இருக்கத்தான் செய்கின்றது.
இந்நிலையில், உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவர் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவர் கிளிநொச்சி உரத்திரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியின் மகன்.
இவர் இன்று எமக்கு கருத்து தெரிவித்த போது தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவர்களை ஏளனமாகவே பார்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவர்கள் படிக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.
க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிரிவில் உயர்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக வெளிக்கிட்ட போது அதிபர் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தார் என்று கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.
 
 
 

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியாக மாணிக்கவாசகர் கணேசராஜா

Read More