சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வுத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம்

சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வுத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் வெளியிட்ட முதலமைச்சர், எனினும் ஸ்ரீலங்காவில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஸ்ரீலங்காவில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி 3ஆவது வருடம் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 2 வருட பூர்த்தியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனை முன்னிட்டு கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குரல்பதிவு – முதலமைச்சர்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், எனினும் இந்த தீர்மானம் இதுவரை இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இதனைக் குழப்புவதற்காக பல சக்திகள் திட்டமிட்டு செயற்படுவதை அவதானிக்க முடிவதாகவும் எனினும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வு விடயம் இழுத்தடிப்பு செய்யப்படாது, எதிர்வரும் மாதங்களில் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதுமாத்திரமன்றி அதற்கான முழு ஒத்துழைப்பையும் சிறுபாண்மை மக்கள் என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் 2 வருட பூர்த்தியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போத குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை விரைவில் நிறைவேற்றுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

களுவாஞ்சிக்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மேற்கோள்ள தீர்தமானிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கதிர்காம பாதயாத்திரை குழுவினரை யானை தாக்குதல்

Read More