கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடி புனித பூமியாக பிரகடனம்

பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடி  கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை மையப்படுத்தி  "புனித பூமியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது" என பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

இத்தீர்மானம் பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில்ஏகமனதாகஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.பிரதேசத்தில் ஆலயங்கள்,பொதுஅமைப்புக்கள் என்னிடம்  கோரிக்கையை முன்வைத்துள்ளது.இத்தீர்மானம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரதியமைச்சர் எம்.எம்.எஸ்.அமீரலி,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,இரா.துரைரெட்ணம்,இந்திரகுமார் பிரசன்னா,ஞா.கிருஸ்ணப்பிள்ளை,ஆகியோர்கள் பரிசீலனை செய்து  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.இதனை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் அனைவரும் தீர்மானத்தை முன்வைத்து அதனூடாக பொதுநிருவாக அமைச்சுக்குக்கு எழுத்துமூலமாக தெரியபடுத்தப்படும்.அதன்பின் சம்பிரதாயபூர்வமாக வர்த்தகமானி அறிவித்தல் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் பாரம்பரிய, காலாச்சார,பண்பாட்டு,ஒழுக்கம் நிறைந்த சமூகமாக மாற்றியமைக்கவுள்ளோம்.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவம் நடைபெற்றால் இப்பிரதேச மக்கள் மிகவும் சம்பிரதாயபூர்வமாகவும்,மதஅனுஸ்டானத்துடன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுடன் திருவிழாக்காலங்களிலும்,தினப்பூசைக்காலங்களிலும் பக்திபரவசமாக கலந்துகொண்டார்கள்.

ஆனால் இன்று மதுபானசாலைகளினால் எமது பிரதேசம் கலை,கலாச்சார ,பண்பாடு ஒழுக்கவிழுமியங்கள் அழிந்து நாசமாகியுள்ளது.பாரம்பரியங்களுடன் நடைபெற்ற ஆலய உற்சவங்கள் தமிழ்மக்களிடையே மதுபாவனையால் மதநம்பிக்கை இழந்துள்ளது. இதனால் தமிழ்மக்கள் வறுமையாகவும்,கடனாளியாகவும் வாழ்வதோடு பிள்ளைகளை கல்வியில் வளப்படுத்த முடியாமல் உள்ளார்கள்.இதனால் மட்டக்களப்பு மாவட்டம்,வறுமையிலும்,மதுபாவனையிலும் முதலிடத்தில் உள்ளது.
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இரண்டு மதுபானச்சாலைகளை மூடுமாறு பிரதேச ஆலயங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
 பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் எல்லையில் உள்ள கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி சந்தியிலும், அம்பிளாந்துறை முருகன்கோயில் அண்மையிலுமுள்ள இரண்டு மதுபானசாலைகளையும், மூடுமாறு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலய பரிபாலனசபையும்,தாந்தாமலை முருகன் ஆலய பரிபாலனசபையும்,பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயபரிபாலனசபையும், கூட்டாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரிடமும்,  பட்டிப்பளை பிரதேசசெயலாளரிடமும் தமிழ்தேசியகூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலயமானது கடந்த 1983ம் ஆண்டு சிவபூமியாக ஆலய பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,நாட்டில் ஏற்பட்ட  போர்காலத்தில் படுவான்கரைப்பிரதேசம் எந்த மதுபானசாலைகளும், அற்ற பிரதேசமாகவும் இளைஞர்களிடையே மதுபாவனை இன்றியும்,கொக்கட்டிச்சொலை பிரதேசம்  காணப்பட்டது.

ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பதற்கு  மதுபானசாலைகள் இருப்பதே முக்கியகாரணமாகும்.

அம்பிளாந்துறை முருகன் ஆலயத்தில் இருந்து 200மீற்றர் தூரத்திலும், கற்சேனை பாடசாலையில் இருந்து 400மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள மதுபானச்சாலையையும்,மணல்பிட்டி சந்தி கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் புனித பூமியின் அண்மையில் இருப்பதாலும் இந்த இரண்டு மதுபானசாலைகளாலும், பாரிய குடும்ப வன்முறைகள் பூகம்பமாக வெடித்துள்ளதுடன், இளைஞர்கள்மத்தியில் தீய செயற்பாடுகளும் நாளாந்தம் அதிகரித்துள்ளது. உடனடியாக இந்த இரண்டுமதுபான நிலையங்களையும் மூடிவிட உத்தரவு பிறப்பிக்கும்படி மூன்று தேசத்துகோயில்களின் நிர்வாகசபை கூட்டாகவேண்டுகோள் கொடுத்துள்ளது.

சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தால் வழக்கு

Read More