தமது மண்ணுக்கும் பாடசாலைக்கும்பெருமை தேடித்தந்துள்ள மாணவி!செல்வி. சந்திரகுமார் சர்மிலா

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஆரையம்பதி மண்ணின் புத்திரி செல்வி. சந்திரகுமார் சர்மிலா அவா்கள் முன்று பாடங்களிலும் A“ தரசித்தியைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது நிலையையும் அகில இலங்கை ரீதியாக 51 வது நிலையையும் பெற்று தான் கல்வி கற்ற ஆரையம்பதி இராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்திற்கும் தமது மண்ணுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
 

பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்ப பிண்ணணியை கொண்ட இவ் மாணவியின் வெற்றிக்கு அர்பணிப்புடன் பக்கபலமாய் இருந்த இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் பாரட்டுக்குரியவராகின்றனர்.  நகர பாடசாலைகளை தேடிச்சென்று கல்வி செல்வத்தை தேடும் வழக்கமுள்ள இவ் பிரதேசத்தில், நமது வித்தியாலயத்திலே பயின்று மாவட்டத்தில் முன்னணியில் சித்திபெற்றுள்ள  ஆரையம்பதியின் புதல்விக்கும் அவருடன் நமது மண்ணில் பல்கலைகழக தகுதி பெற்றிருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஊழல் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம்

Read More