மட்டக்களப்பில் புதிய அமைப்பு உருவாகிறது - அனைவருக்கும் அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய சமூக அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் சமூக பொருளாதர கல்வி அபிவிருத்தி தொடர்பில் பொதுவெளியில் பணியாற்றுவதற்காக மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் வர்த்தகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஆரம்ப கூட்டம் நாளை(08.01.2017) தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத வீதியில் (டெலிக்கோம் வீதி) அமைந்துள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் அக்கறையுள்ள சமூக அமைப்புக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் வர்த்தகர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்வுகளுக்கு- 0773085473

 

  ஏறாவூரில் கொலை சந்தேகநபர்கள், ஊடகவியலாளர்களை செருப்பைக் காட்டி மிரட்டிய காட்சி

Read More