கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்த ஐனா கொள்கை பற்றி பேசுவதற்கு என்னயோக்கியம்!

கடந்த காலங்களில் கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்த ஐனா தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியம் அற்றவர்  என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர்எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.அண்மையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்..

அவர் மேலும் தெரிவிக்கையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐனா எனப்படும் கோவிந்தம் கருணாகரம் பிரதியமைச்சர் அமீர் அலி ஒரு கொள்கை அரசியல் வாதி அல்ல எனவும் முஸ்லிம் காங்கிரசிலும் அகில இலங்கை மக்கள்காங்கிரசிலும் இருந்தாகவும் தேசியப் பட்டியலை எடுத்துக் கொண்டு கட்சிமாறியதாகவும் நாகூசாமல் பேசியதை பார்த்து வியப்படைந்தேன்.

கடந்த காலங்களில்  கொலைகாரனாகவும், கொள்ளைக்கரனாகவும்  இருந்து தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய கபளிகரத்தை செய்து விட்டு வெளிநாட்டுக்குதப்பியோடி ஒழிந்திருந்து விட்டு இப்போது புலிகள் இல்லை என்பதை அறிந்து வந்து கொள்கை அரசியலை பேசுவதென்பது தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவது மாத்திரமல்ல முழு மனிதநேயத்தையும் அசிங்கியப்படுத்தும் செயலாக நான் பார்க்கின்றேன்.

கொள்கை அரசியலைப் பற்றி பேசுவதற்கு இந்த மாகாண சபை உறுப்பினருக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது என நான் பகிரங்கமாக அவருடன் விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.அவர் செய்த கொலை அவரின் தம்பி மாமா செய்த கொலைகள் பட்டியலுடன் என்னிடம் உள்ளது,அவர் தயார் என்றால் இடம் காலம் நேரத்தை ஒதுக்கி தரும்படி ஐனாவிடம் நான் அகேட்டுக் கொள்கின்றேன்.


போராட்டத்தின் பெயரால் இவர்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் அழுது புலம்பிக் கொண்டிருப்பது இவர்களுக்கு கேட்கவிலையா இவர் கொள்ளையடித்து சென்ற தங்கநகைகள் எத்தனை கோடி என நான் கேட்கவிரும்புகின்றேன்.மண்முனை பாலம்கட்ட 1982ம் ஆண்டு அமைச்சர் இராசதுரை முயற்சியால் கொட்டப்பட்ட கருங்கல் லோட்டுக்களெயே விற்றவர் இவர்.

சமாதனா காலத்திலும் நாட்டிலிருந்து தப்பியோடியவர்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் கொடுத்து விட்டு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டா எனக்கு விரல் நீட்டி பேசுகின்றார்கள்.தற்கால அரசியலில் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இல்லாத அரசியல் கொள்கை,  அமைச்சர் ராஜித சேனாரத்தினவுக்கு இல்லாத அரசியல் கொள்கை, அமைச்சர் சரத்பொன்சேகாவுக்கு இல்லாத அரசியல் கொள்கை இவ்வாறு நீண்டு கொண்டும்செல்லும் அரசியல் தலைவர்களை விடவும் நான் எம்மாத்திரம் என கேட்கவிரும்புகின்றேன்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் நான் எடுத்த அந்தஉறுதியான தீர்மானம் எனது கட்சியின் ஸ்த்திரத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அத்திவாரமாக இருந்தது என்பதை அவர் மறந்து விட்டது வேடிக்கையாக உள்ளது உங்களுடைய கொள்கை அரசியலை உங்களது கொள்கையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் அதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது.ஆனால்  நீங்கள் கொள்கையில் தான் பயணம் செய்கின்றீர்கள்;  என ஒரு முறை உங்களை  கேட்டுப் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.மாலைகளும் மற்றும் பட்டாசுகளும் அடிக்கல் நாட்டுவதும் கட்டிடங்களை திறந்துவைப்பதும் கொள்கை அரசியல் இல்லை என்றீர்கள். இப்போது தெரிகிறதாகொள்கை அரசியலின் கெட்டித்தனம் என நான் கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் சமூகத்துக்கு தொடர்ச்சியாக படம் காட்டாதீர்கள் ஏனெனில் தமிழ் மக்களுக்கு இவர்கள் காட்டும் படம் நன்கு தெரியும்.2009 முள்ளிவாய்கால் அவலம் அதன் பின் புலிகள் இல்லை என்பதால் தற்போது மட்டக்களப்புக்கு வருகைதந்தவர்தான் இந்த ஐனா புலிகளால் தேடப்பட்டவர் இது எல்லாம் எனக்கும் தெரியும்
ஏதாவது ஒரு பிரச்சினை வந்து விட்டால் அதனை வைத்தே இவர்கள் தொடர்ந்து படம் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதை எல்லோரும் அறிந்துள்ளார்கள்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த ஒருங்கிணைப்பு அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தை வைத்து அடுத்ததீர்வுத்திட்டம் வரை பேசிக் கொண்டிருப்பார்கள்.நான் ஜனநாயகத்தை மதிப்பவன் அதை நேசிப்பவன், எனது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் கொள்ளையடித்த அல்லது யாரையும் கொலை செய்தவன் என்ற அசிங்கமான வரலாறு எனக்கு கிடையவே கிடையாது.

ஆகவே எனக்கு விரல் நீட்டுவதற்கு இவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதை நான் துனிந்து கூறிக் கொள்கின்றேன்.இவைகளையெல்லாம் பேசுவதை விட்டு விட்டு நமது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நமது சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான பல விடயங்களை நம்மால் செய்ய வேண்டியுள்ளது.மாவட்டத்தில் மது போதையை ஒழிப்பதும் வறுமையை இல்லாமல் செய்வதும்மாவட்டத்திலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதும் நமக்கிருக்கின்ற பெரிய பொறுப்புக்களாகும்.ஊடகத்துக்கும் முகநூலுக்கும் அரசியல் செய்யும் ஐனா என்னைப்பற்றி கதைப்பதை தவிர்கவும் முடிந்தால் பகிரங்க விவாதத்திற்கு வரவும்

இவற்றை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்வதற்கு முன் வருமாறு நான் இவர்களை கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

சமூகசேவைத் திணைக்களம் மாற்றுத் திறனாளிகளின் வகிபாகத்தினை பார்வையிட இந்தியா பயணம்

Read More