பணிச்சையடிக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கல்விச் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கோடு பணிச்சையடிக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (6) கேற் வே நிலையத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் செயற் குழு உறுப்பினர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 1 தொடக்கம் 9 வரையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சிமட்டக்களப்பு இளைஞர் அணித ;தலைவர் கி.சேயோன், மண்முனை வடக்கு கிளையின் உப செயலாளர் பொன் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

  

  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்”ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Read More