கிழக்கு மாகாணத்தில் அதிபர் இடமாற்றத்தில் குளறுபடி

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையால், சில அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதனை சில பொதுநல அமைப்புகள் மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன.

சில அதிபர்கள் அடிக்கடி இடமாற்றப்படும் அதேவேளை, சிலர் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வசதியான பாடசாலைகளில் கடமைபுரிய அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மேற்படி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிண்ணியா கல்வி வலயத்தில் ஒரு அதிபர் ஒரே பாடசாலையில் தொடர்ந்து 22 வருடங்கள் கடமை புரிந்து வருகின்ற போதிலும், கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் இந்த விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு ஆளுநரிடம் மேற்படி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 









மட்டக்களப்பு நகரில் தேன் என்று கூறி சீனிப்பாகு விற்பனை

Read More