கிழக்கில் போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதில் அரசியல்வாதிகளும் பாரிய பங்கு!

இன்றய இளைஞர்கள் பிழையாக வளிநடாத்தப்படுகின்றனர். சில அரசியல்வாதிகள் தனது வெற்றிக்காக எந்த தவறு செய்யவும் தயங்குவதில்லை அதுமாத்திரமல்லாமல் மதுக்கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. போதைவஷ்துக்களை பெற்றுக்கொடுத்து அதன் மூலம் அவர்களை அடிமையாக்கி தன்வேலையை முடித்துக் கொள்கின்றனர். எனவே இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொண்டால் நாட்டில் போதை ஒழிப்பு என்ற ஒரு நிகழ்வே தேவைப்படாது என அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

 

போதைப்பொருளை ஒழிப்போம் நிம்மதியான வாழ்வை வாழ்வோம். என்று இன்றைய சூழலில் அனைவரும் கூறிக்கொண்டிருக்கும்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருந்தத்தக்க விடயமாகும். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

 

போதைப் பொருட்களை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்குட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது. போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும், அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்றைய இளஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் கட்டாயமாகும்.

 

எமது சமூகத்தில் மட்டுமல்லாது நாடே பயண் அடையக்கூடிய வகையில் இளைஞர்கள் சரியாக நடாத்தப்பட்டால் போதைப்பொருள் தடுப்பு மாத்திர மன்றி நாட்டில் எவ்விதப்பிரச்சனைகளும் ஏற்படாதவாறு சகல நிருவாகத்தையும் எடுத்துச் செல்வார்கள்.

 

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக கிழக்கு முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் முனாஸ் கருத்துத் தெரிவிக்கையில். இன்றய இளைஞர்கள் ஒரு தேவைக்காக மாத்திரம் அரசியலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் ஆனால் அந்த நிலமை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஈடுபடும்போது சில இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி தன்வாழ்க்கையினை சீரளித்து விடுகின்றனர். ஆகவே இதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள் தொடக்கம் ஏனைய அனைவரும் இப்படியான விடயங்களைத் தவிர்த்து சமூகத்துக்கு நற்பிரஜகளை உருவாக்கும் சிந்தனையில் நல்லதை எடுத்து மோசமானவைகளைத் தடுத்து வாழ பழகிக் கொள்ளவேண்டும் என்று அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்....

(தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் JP.)

மாவீரர்கள் என்றும் மரணிப்பதில்லை

Read More