மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூத்த அரசியல் வாதியும், பிரபல வழக்கறிஞரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்  (05) பிற்பகல் 05.00 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சி.இளங்கோ தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நினைவு தின நிகழ்வில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஈகைச் சுடரேற்றினார். அதனைத் தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

  

  

  வெள்ள நீரில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Read More