கிரான் நேசறியடி பிள்ளையார் ஆலயத்தின் மூலவிக்கிரகம் கொள்ளை

கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாவலடி நேசறியடி பிள்ளையார் ஆலயத்தின் மூலவிக்கிரகம் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9.00 மணியளவில் குறித்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை பூஜை வழிபாடுகளுக்காக துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் முகமாக ஆலயத்திற்குச் சென்ற போதே, விக்கிரகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாழைச்சேனைப் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற ஆலயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

  

  

  

  

  

ஓவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கிவைப்பு

Read More