பாடசாலை நாட்களில் வீதி அபிவிருத்தியா?

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்கான 550 மீற்றர் பிரதான வீதி அபிவிருத்தி வேலைகள் வெயில் காலமும் மார்கழி விடுமுறை தினங்களும் முடிந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை நாட்கள் தவிர்ந்த தினங்களில் இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படுவது குறித்து சம்மந்தப்பட்டோர் கவனத்திற் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.வீதி பூராக கற் குவியல்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கடற்கரை மீன் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் இப்பாதையால் சிரமத்திற்கு மத்தியில் பயணிக்கின்றனர்.காரைதீவு பிரதேச செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந்திடம் இது பற்றி முறையிடப்பட்டுள்ளது. வீதியின் அகலத்தை மையமாக வைத்து இதற்கொரு பக்க வடிகான் போதுமானது என உயர் மட்ட சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட போதிலும் தற்போது இருபக்க கான் வேலைகள் நடைபெற்று வருவது குறித்து விசனம் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் வீதி குறுகி வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுமெனக் கூறப்படுகின்றது. கூட்டங்களில் இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட அனுமதிக்க முடியாது என பிரதேச செயலாளர் கூறியுள்ளார். இவ்வீதி மற்றும் பாலம் பற்றி சம்மந்தப்பட்டோர் கவனமெடுக்க வேண்டும் என்பதே வேண்டுகோளாகும்.அவ்வீதியிலுள்ள காலாவதியாகிய பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்டோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேக தின 1008 சங்காபிசேக பெருவிழா

Read More