பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளரால் போரதீவுப்பற்று கல்விக்கோட்டம் புறக்கணிப்பு

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குள்ள படுவான்கரைபிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தினை பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட கோட்த்தில் 32 பாடசாலைகள் அமைந்துள்ளன.இதில் 18பாடசாலைகளில் க.பொ.த.சாதாரண தரம்வரை கற்பிக்கப்படுகின்றன. சில பாடசாலைகளில் கலை வர்த்தகப்பிரிவுகளும கற்பிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் கோட்டத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் ஆசிரியர் வளத்தை காரணம் காட்டி வலயகல்விப்பணிப்பாளர் தடைபோட்டுவருதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டத்தின் புதிய வகுப்பு ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் பொருட்டு பிரதேச பிரமுகர்கள் ,மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டத்தின் 18 பாடசாலை அதிபர்கள் செவ்வாய்க்கிழமை பழுகாமம் கண்டுமணி வித்தியாலயத்தில் கூடி ஆராய்ந்த போதிலும் இக்கூட்டத்திற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் வருகைதராமல் புறக்கணித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்பாடு சம்பந்தமாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு அறிவித்திருந்தும் அவர் எதுவிதமுன்னறிவிப்புமின்றி ஏற்பாட்டினை புறக்கணித்துள்ளார்.
ஆசிரியர் வளத்தினை வழங்கக்கூடிய வலயக்கல்விப்பணிப்பாளர் வருகை தராமையால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் இவ்வாண்டு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞான பிரிவு; ஆரம்பிப்பதென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் தங்களால் மேற்கொள்ளப்படும் என இதில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர்களான ஐனா, வெள்ளிமலை, நடராஜா ஆகியோர் உறுதி மொழியத்துள்ளனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் இரு கோட்டங்கள் உள்ளபோதிலும் களுவாஞ்கிக்குடி கோட்டத்தில் 1ஏ.பீ 4 பாடசாலைகளும், ஒரு தேசிய பாடசாலையும்காணப்படுகின்ற போதிலும், போரதீவுப்பற்றுக்கோட்டத்தில் உந்தவொரு 1ஏ.பி பாடசாலையும் இல்லை என்பது வேதனையான விடயமாகும். இச்சந்திப்பு தொடர்பாக மாகாணசபை உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே துரதிஷ்ட்டமான கல்விக்கோட்டம் போரதீவுப்பற்று கல்விக்கோட்டம்தான்.உயர்தரத்தில் ஒரு பாடசாலையிலும் விஞ்ஞான, கணிதப் பிரிவு இல்லை.இது சம்பந்தமாக பலதடவைகள் அபிவிருத்தி கூட்டங்களிலும்,மாகாண சபையிலும் கதைத்து இருக்கின்றேன்.இருந்தும் இன்று காலை கோட்டத்தில் உள்ள 32 பாடசாலைகளில் சாதாரண தரம் வரை உள்ள 18 பாடசாலைகளின் அதிபர்களையும்,கோட்டக்கல்வி அதிகாரியையும், வலையக்கல்விப் பணிப்பாளரையும் அழைத்து,மாகாணசபை உறுப்பினர்களுடன் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் ஒரு கலந்துரையாடலுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது…… மிகவும் மனதுக்கு கஷ்ட்டமான விடயம் ஆசிரியர் வளங்கள் வழங்கக்கூடிய வலயக்கல்விப்பணிப்பாளர் வரவில்லை.காரணமும் கூறப்படவில்லை.இதிலிருந்து விளங்கக்கூடியதாகவுள்ளது எவ்வளவு அக்கறை என்று………இருந்தும் அங்கு உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த வருடம் எப்படியாவாவது கணித,விஞ்ஞான பிரிவு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் தொடங்கப்படும் என்றார்.

 

  

  

  

  

  

பாலமுனை மாநாட்டில் குமரிகள் குத்தாட்டம் போடவில்லை ; ஹக்கீம் விளக்கம்

Read More