மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறைக்கூடமாக காணப்படும் மருத்துவ விடுதி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ம் விடுதி இரு மருத்துவ விடுதிகள் ஒரே அறையில் அடுத்த அடுத்த தூணில் 16ம் ,34ம் விடுதி என வித்தியாசப்படுத்தியுள்ளனர்.
ஆனால் ஒரே அறையில் இயங்கிக்கொண்டு இங்குள்ள நோயாளியின் கட்டிலுக்கு நான்கு மடங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சில நோயாளிகளை தவிர பெரும் பாலானா தீவிர படுக்கை ஓய்வு கட்டாயம் அவசியம் தேவைப்படும் என கருதும் நோயாளிகள் கூட வெளிக்காம்பிரா, தரை, விடுதி வெளியிலுள்ள மரம், போன்றவற்றில் ஒரு பொழுதை எப்படியாவது கழித்து சிகிச்சையை இடையில் விட்டுத்து ஓடும் மனநிலையில் காணப்பட்டனர்.
இதில் உள்ள நோயாளிகளில் தீவிர தொற்றுநோய் உள்ளவர்களும் கண்டுபிடிக்க முன் சாதாரண நோயாளியுடன் பிரித்தரியப்பட முன் ஒரே சிறை கூண்டில் அடைக்கப்பட்டது போன்று காணப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சையில் நோயாளியின் ஓய்விற்கு சிறந்த தூக்கம் அவசியம் இது இவ்விடுதியில் கிடைக்குமா???என்பது சந்தேகம்
இங்குள்ள நோயாளிகளில் காசநோய், சீனிநோயாளி, இதயநோயாளி, நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ள நோயாளிகள், சிறுநீரகநோயாளி, சில சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள், டெங்கு காய்ச்சல் இப்படி நிறைவான வித்தியாசமான நோய்களை ஒவ்வொரு நோயிற்கும் மருத்துவ, சத்திரசிகிச்சை தொடர்பான, சிறுகுழந்தை,தொற்றுநோய், இதயநோய், கண், காது, தொண்டை, மூக்கு இப்படி தனித்தனியாக பிரித்து நோயியல் தொடர்பாக விடுதிகளை சிகிச்சை இலகுவாக வழங்குவதற்காகவும், ஒவ்வொரு நோய் தொடர்பான வைத்திய நிபுணர்களை அனுகுவதும் இலகு என்பதற்கு தற்போதைய வளர்ச்சியடைந்த காலத்தில் விடுதி அமைக்கின்றனர் இந்த நடை முறை இங்கு சிறிது கூட பின்பற்றப்பட வில்லை.
ஆனால் இந்த விடுதி வைத்தியநிபுணர்கள் இங்கையே பிறந்து வளர்ந்து தொழில் புரியும் பொது வைத்தியநிபுணர்களான Dr.முருகுமூர்த்தி (Vp),Dr.அகிலன் (Vp) போன்றவர்களின் கண்காணிப்பில் உள்ளது அவர்களின் நோயாளி பார்வையிடும் நேரம் இவர்களின் அவலம் தெரிவதில்லையா??? அல்லது தெரிந்தும் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தவில்லையா ???என பல கேள்விகள் எழுகின்றது.
இவ் வைத்திய விடுதி முகாமைத்துவம் போன்றவற்றை பேணும் சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தரிற்கும் நோயாளி பராமரிப்பு கொடுப்பதை எப்படி இத்தனை பேரையும் ஒரே கூண்டில் வைத்து வழங்குவார்கள் என்பது அவர்களும் புரியாத மாதிரி உள்ளார்கள்.
இன்றைய காலத்தில் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் குறித்த தொகை மாணவர்களை மாத்திரம் அளவோடு வைத்துக்கொள்ளலாம் என நடைமுறை பேணும் கல்வியதிகாரி போன்று நோயாளி உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களை ஒருவிடுதியில் அளவோடு வைத்து பராமரிப்பு வழங்கும் முறை தெரியாதளவு சுகதாரத்துறை இருப்பது காலத்தின்கொடுமை.
விடுதியிற்கு எதிரே மோட்சரி (சடலம் வைக்கும் அறை) அதை பார்ப்பதற்கு தமது உளவியலை பாதிப்பு உள்ள உணர்வு துணியால் மூடி கவலை உடன் இரவு பூராக தூக்கமின்றி அவ் வயது முதிய திக்கோடையை சேர்ந்த கணபதிப்பிள்ளை 60வயது காணப்பட்டார் இவரை போன்று பலர் எதிரே இருக்க இடமில்லாமலும் உறக்கமில்லாமலும் பிணயறையை வெறித்து பார்த்துக்கொண்டு எப்படியாவது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் பார்வையிலிருந்து தப்பியோடி விட மறுபார்வையாளர் நேரத்துடன் உள்ளனர்.
தயவு செய்து இவ்வைத்திய அபிவிருத்திகுழு இவ் விடுதியை இரண்டு விடுதியாக பிரித்து ஒரே அறையில் உள்ள 16/34போன்ற விடுதிகளை ஒரு தூண்ணினால் பிரிவு படுத்தி காணப்படுவதை தவிர்த்து இரண்டையும் பிரித்து நோயாளிகளின் பராமரிப்பை தரமாக வழங்கும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

  

  

  

  

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரைக் கொன்றது கருணா...?

Read More