கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கிவைப்பு.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் நாம் தமிழர் பண்பாட்டு கலைக்கழகத்திற்கு இசைக்கருவிகள் வழங்கிவைப்பு.  


கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் சின்னவத்தை நாம் தமிழர் பண்பாட்டு கலைக்கழகத்திற்கு 01.01.2017 இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 
     கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் சின்னவத்தை இராசமாணிக்கம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில்; மாவட்ட இந்து கலாச்சார உத்தியேதகத்தர் கி.குணநாயகம் சின்னவத்தை   சித்தி விநாயகர் ஆலயம் ‘ நாகதன்பிரான் ஆலயம் மாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவ‘ த.அரசன் குருக்கள் கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர் ம.கலாவதி சித்தி விநாயகர் ஆலய தலைவர் யோ.சுரேஸ் ‘  நாகதன்பிரான் ஆலய தலைவர் கோ.ராஜு நாம் தமிழர் பண்பாட்டு கலைக்கழகத் தலைவர் கோ.பிரசாத் செயலாளர் தெ.ஜெயசீலன்  உறுப்பினர்கள்; மற்றும் பொது மக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
     இந்து கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கல் கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் புண்ணிய ஸ்தலங்களுக்கான தலயாத்திரை செல்லல் மற்றும் விசேட தினங்களில் ஆலயங்களில் அன்னதான நிகழ்வுகள் செய்தல் என பல செயற்பாடுகளை இவ் அமைப்பு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

 

  

  

  மாணவர்களை பாதுகாக்குமாறு அதிபர்களிடம் கோரிக்கை

Read More