மண்முனைப்பாலம் புத்தாண்டுடன் புத்தொளி பெற்றது

மட்டக்களப்பில் பிரதான பாலத்தின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளும் கடந்த ஒரு வருடமாக ஒளிராமல் இருந்த நிலையில் தற்போது அவை மாற்றப்பட்டு ஒளிர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுவான்கரையையும், படுவான்கரையையும் இணைக்கும் மண்முனைத்துறை பாலத்தின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள 24 மின்விளக்குகளுமே புத்தாண்டு நள்ளிரவுடன் ஒளிர ஆரம்பித்துள்ளன.

கடந்த வருடம் ஜுன் மாதம் இது தொடர்பாக அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதேவேளை மண்முனை தென்மேற்கு பிரதேச அபவிருத்திகுழு கூட்டத்திலும் தொடர்ச்சியாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் இந்த மின்குமிழ்களை இட்டு பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கையை தாம் எடுப்பதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை உறுதியளித்திருந்தார்.

இதனடிப்படையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு புத்தாண்டு நள்ளிரவிலிருந்து மின்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேவேளை இப்பாலத்திலுள்ள 24 மின்விளக்குகளும் ஒளிராதையிட்டு முதன் முதலில் லங்காசிறி ஊடகம் படங்களுடன் செய்தி வெளியிட்டமை இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.

 

  

  

துறைநீலாவணை கண்ணகி அம்மன் திருச்சடங்கு படங்கள்

Read More