கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் திகதி மாற்றம்

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி பெற்ற கலை மற்றும் கலாச்சார பீடங்களுக்குரிய புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக குறித்த பீடங்களின் பீடாதிபதி முனியாண்டி ரவி தெரிவித்தார்.

எதிர்வரும் 05.01.2017 ஆம் திகதி நடைபெற இருந்த கலை மற்றும் கலாச்சார பீடங்களுக்குரிய புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டு எதிர்வரும் 19.01.2017 ஆம் திகதி அன்று நடைபெறும் என்பதை குறித்த பீடங்களின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 19.01.2017 ஆம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு வருகை தரும் கலை மற்றும் கலாச்சார பீடங்களின் மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்பட இருப்பதனால் விடுதியில் தங்குவதற்குரிய ஏற்பாடுகளுடன் மாணவர்கள் வருமாறு கலை மற்றும் கலாச்சார பீடங்களின் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தொடர்புகளுக்கு :

கலை மற்றும் கலாச்சார பீடங்களின் அலுவலகம் - 065-2240971

கலை மற்றும் கலாச்சார பீடாதிபதியின் அலுவலகம் - 065-2240165

 

 இலங்கைக்கு சர்வதேச சமூகம் மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது!

Read More