கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில்! இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக

இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
 

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளினதும் மரபணு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக பிரஜைகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 60 இலட்சம் என்றும் தெரிவித்தார்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கான சட்டவிதிகளை சட்டமா அதிபர் திணைக்களம் தயாரித்துள்ளது. அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதி இம்மாதம் பெற்றுக் கொள்ளப்படும். பொதுமக்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திணைக்களத்தின் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகையில் இதன் கீழ் வடமாகாணத்தின் அலுவலகம் வவுனியா நகரத்திலும், கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தின் அலுவலகம் குருநாகலில் அமைக்கப்படவுள்ளது. ஊவா மற்றும் தென்மாகாண அலுவலகங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

  இரட்டைவாதிகள் மீது எச்சரிக்கையாய் இருப்போம் ----- ஞா.ஸ்ரீநேஷன்

Read More