வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் உறுதிமொழி நிகழ்வு

போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் உறுதிமொழி நிகழ்வுபோரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் மற்றும்உறுதிமொழி இன்று 02.01.2017 திங்கள் கிழமை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு என்.வில்வரெட்ணம் தலைமையில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அலுவலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி

அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு சனவரி மாதம் கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம்.இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் காலடிவைக்கின்றோம்.

இன்று ஆரம்பமாகும் புத்தாண்டினுள் ஒரே நாட்டின் ஒரே இனத்தின் ஒரே கொடியின் நிழலில் ஜக்கியமாகவும் ஒரே மனப்பான்மையுடனும் மலர்ச்சியடைகின்ற தாய் நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய சவாலை வெற்றி கொள்வதற்காக அனைவரும் பயனடையும் வகையிலான துரித அபிவிருத்தியினூடே 2017 ஆம் ஆணடில் வறுமையை ஒழித்து இந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பானதோர் எதிர்காலத்தை தேற்றுவிப்பதற்காக பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியனான நான்இ அரசாங்க கொள்கைகள் மற்றும் நோக்கங்கங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற கடமைப் பொறுப்புக்களை வினைத்திறனாகவும் பயன்மிக்கதாகவும் திடசங்கற்பத்துடனும் நேர்மையாகவும் மக்களுக்கு பக்கச்சார்பின்றியும்நிறைவேற்றுவேன்; என்று சத்தியப்பிரமானம் செய்கின்றேன்.

  

  

  

  

  

இளம் பெண்கள் மத்திய கிழக்கிற்கு தொழிலுக்கு செல்வது ஆபத்தானது - ஸ்ரீ நேசன் பா.உ

Read More