கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!ஷிப்லி பாறுக்

2016.12.18ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை நாடு பூராகவும் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் போட்டியிட்டு இன விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2017.01.01ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்திற்கு நேரில்சென்று தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டுமென்றும், இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் தன்னாலான அனைத்து விதமான உதவிகளையும் இளைஞர் யுவதிகளின் நலன்கருதி பெற்றுத்தருவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் அவர்களிடம் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம். வசான் அவர்களும் கலந்துகொண்டார்.

  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயக் கொடியேற்றம்

Read More