தமிழ்மக்கள் ஆண்ட பரம்பரையினரே தவிர மாற்று இனத்தினால் அடிமையாக ஆளப்பட்ட இனம் அல்ல

தமிழ்மக்கள் ஆண்ட பரம்பரையினரே தவிர மாற்று இனத்தினால் அடிமையாக ஆளப்பட்ட இனம் அல்ல  ஆகையால் வடகிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான நியாயமான  தீர்வினை எதிர்பார்த்தவர்களாகவே தமிழ்மக்கள் இருக்கின்றனர் என கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார்
மட்டக்களப்புத் துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிட நிர்மானத்திற்காக கிழக்குமாகாணசபை உறுப்பினரால் 55 பைக்கட சீமந்து வழங்கிவைக்கும் நிகழ்வு ஆலயத்தலைவர் நா.மாணிக்கராசா தலைமையில் சனிக்கிழமை 31 ஆம்திகதி மாலை  ஆலயமுன்றலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்தகொண்டு பேசுகையில் மேற்கண்டவறு தெரிவித்தார் 
அவர் மேலும் பேசுகையில் தமிழ்மக்கள் ஆரம்பகாலத்தில் இருத்து இந்த நாட்டில் தங்களுக்கான உரிமையினைப் பெற்றுக்கொள்வதற்காக பலவழிகளிலும்போராடி இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலாவது நல்லதோர் தீர்வு கிடைக்கும் என நம்பியிருக்கின்றார்கள்.
கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் கல்வி கலாசாரம் அரசியல் போன்ற விடயங்களில் முன்னேறியசமூகமாகவும் ஏனைய இனத்திற்குக் கற்றுக் கொடுக்கும் திறமையாளர்களாகவும் இருந்திருந்தோம் ஆனால் இன்று அந்த விடயம் பூச்சியமாக மாறி நாம் வேறு இனத்தவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு இல்லாது நாம்  முன்னேறிய சமூகமாக வாழவேண்டும் அதற்கு அனைவரும் உதவிகளைச்செய்யவேண்டும்
இன்று ஆலயங்கள் சமூகத்தில் முக்கியமானதாக இருக்கின்றது ஆனால் சில ஆலயங்களில் ஏழைகள் அடிமைகளாக்கப்படுவதும் அவர்கள் ஒதுக்கப்படுவதுமான செயல்கள் இடம்பெறுவது மதமாற்றத்தினை ஏற்படுத்தும். ஆகையால் ஆலயங்கள் ஏழைகளுக்கு உதவுவதாக அமையவேண்டும்
 வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலயங்கள் பலவற்ற்pல் போதியளவு நிதி இருக்கின்றது அவ்வாறு இருக்கும் நிதிகளை சமூகத்திற்காகவும் ஏழைகளின் வாழ்வுக்காகவும் உதவும்போது எமது தமிழ்ச் சமூகத்தினை உயர்த்தமுடியும் என்றார்

 

தமிழீழ தலைவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்தும் சீமான்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Read More