தமிழரின்தாகமும் சம்பந்தன் ஐயாவின் காலவகாசமும்.பா.அரியநேத்திரன்,மு.பா.உ

தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த 2015 டிசம்பர் மாதம் கருத்துக்கூறும்போது 2016ம் ஆண்டுக்குள் வடகிழக்குமக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என காலக்கேட்டை கூறினார்.
ஆனால் தற்போது 2017ம் புத்தாண்டு மலர்ந்த சூழலில் சம்பந்தர்ஐயாவின் காலவகாசம் தொடர்பாக பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.தமிழரின் தாகமும் சம்பந்தன் ஐயாவின் காலவகாசமும் பற்றி நாங்கள் வரலாற்று ரீதியாக பார்கவேண்டும்என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதமிழரசுக்கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரிந்நேத்திரன்கூறினார்.

புத்தாண்டுக்கான மக்கள் சந்திப்பு அவரின் அம்பிளாந்துறை இல்லத்தில் இன்று(01/01/2017) ஞாயிறு பி.ப 5மணிக்குஇடம்பெற்றது அந்த கூட்டத்தில் அங்கு கலந்து கொண்ட ஆதரவாளர்கள் சம்பந்தன் ஐயாவின்காலக்கேடு பற்றி கேழ்வி எழுப்பினர்அதற்குபதில் தெரிவித்த அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில்கையில்.எமது உரிமைக்கான விடுதலைப்போராட்டம் தந்தைசெல்வா தலைமையில் அறவழிப்போராட்டமாகவும்,தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டமாகவும்,தற்போது சம்பந்தன் ஐயா தலைமையில் இராஐதந்திரசெயல் பாடகவும் முன்னெடுப்பதை நாம் காணலாம்.

தந்தைசெல்வாவின் அகிம்சைப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திபோராடியிருக்கத்தேவையில்லை தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் சம்பந்தன்ஐயா இராஐதந்திர அரசியல் செய்யவேண்டிய தேவையில்லை.ஒவ்வொரு தலைவர்களின் போராட்டங்களின் போது அந்த தலைமைகள் அல்லது தலைமை சாந்தவர்கள் காலக்கேடுகளை மக்கள் மத்தியில் கூறுயதை நாம் மறக்ககூடாது.


தந்தைசெல்வா 1957 யூலை 26ம் திகதி பண்டாசெல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதை இலங்கை அரசுஏற்றிருந்தால்1958ம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் ஏற்பட்டிருக்காது சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேறியிருக்காது சிங்களத்தலைவர்கள் பண்டாசெல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த வரலாறு நாட்டில் இனமுறுகலை தோற்றுவித்த்து.

அதுபோலவேதான் 1965 மார்ச் 24ல் ட்டலி செல்வா ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றியிருந்தால் தனிநாட்டுக்கான கோரிக்கை தமிழ்தலைமைகளில் இருந்து எழுந்திருக்கமுடியாது.

இந்த ஒப்பந்தங்களை சிங்களதலைமைகள் கிழித்து வீசியதனால்தான் ஏமாற்றப்பட்ட தந்தைசெல்வா 1976 மே 14ம் திகதி வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பித்து தமிழீழப்பிரகடனம் செய்யும்நிலை ஏற்பட்டது.

அந்த பிரகடனம்தான் 1977 யூன் 24ல் பொதுத்தேர்தலில் தமிழீழத்தை வென்றெடுக்க தமிழ்மக்கள் ஆணையாக தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வடகிழக்கு மக்களை தமிழர்விடுதலைக் கூட்டணிதலைவர்கள் பிரசாரம் செய்தார்கள்
அதன்செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்திற்கு எம்மை அனுப்புங்கள் தமிழீழத்தை பெற்றுத்தருவோம் என உரையாற்றி காலக்கேட்டை முன்வைத்தார் இதனால் வடகிழக்கு தாயகத்தில் கல்குடா
தொகுதி தவிர்ந்த அனைத்து தொகுதியிலும் 18,பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி முதன்முறையாக அமிர்தலிங்கம் எதிர்கட்சியானார் ஆனால் தமிழீழம் கிடைத்ததா இல்லை.அமிர்தலிங்கத்தின் காலக்கேடு நிறைவேற்றப்படவில்லை
இவ்வாறான ஏமாற்றத்தின் தொடர்சிதான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டது 36,விடுதலை இயக்கங்கள் ஆரம்பத்தில் விடுதலைக்காக புறப்பட்ட போதும் அனைத்து இயக்கங்களும் 1987 யூலை 29ம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்தன,இந்தியபிரதமர் ராஜீவ் காந்தி இருவரும் கையொப்பமிட்ட  இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் தமிழீழவிடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் செயல் இழந்தன அதாவது விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்டன

அதற்குமுன் 1985 பூட்டான் தலைநகரான திம்புவில் அப்போதய ஜே.ஆர் அரசுக்கும் விடுதலை இயக்கங்களான தமிழீழ விடுதலை புலிகள்,ஈபீஆர்எல்எவ்,ரெலோ,ஈரோஷ்,புளட் என்பன இந்தியாவின் முயற்சியால் பேச்சுவார் தைகளை முன்எடுத்தபோதும் இலங்கை அரசின் விடாப்பிடியான நிலைமையால் அது தோல்விகண்டது அன்று திம்பு பேச்சு வெற்றியடைந்திருந்தால் அதன் பின்பு ஏற்பட்ட ஆயுதப்போராட்டம் ஏற்பட்டிருக்காது.

1987க்பின் தமிழீழவிடுதைப்புலிகள் மட்டுமே மண்விடியலுக்கான மகத்தான தியாகங்களை முப்படை பரிணாமத்தில் மேற்கொண்டமையால் 2007ம் ஆண்டுவரையும் வடகிழக்கில் 70வீதமான நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து தனியான நிர்வாக ஆட்சியை நடாத்தியவரலாறு எம் மண்ணுக்குஉண்டு.விடுதலைப்புலிகளும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காலக்கேடுகளை கூறி இறுதிப்போர் என பிரகடனப்படுத்தி எமது புலம்பெயர் மக்களிடமும் தாயகமக்களுடமும் தங்கநகைகள் பெரும்தொகையான பணத்தையும் விரும்பி வாரிவழங்கியவரலாற்றை நாம் மறக்கவில்லை

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் 2002,பெப்ரவரி 22ம் திகதி தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு போர்நிறுத்தம் மேற்கொண்டபோதும் பல கட்டப் பேச்சுவார்தைகள் ஜெனிவா,பிறான்ஷ்,லண்டன்,சுவிஷ்,டென் மார்க்.ஜேர்மணி என இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும்  மேற்கொண்ட போதும் அரசு தன்னிச்சைக விலகிய வரலாறுகளையும் நாம் அறிவோம்.

இனவாத சிந்தனையுடன் செயற்படும் அரசானது தமிழ்மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்க எப்போதும் தயாராக இருந்ததில்லை தலைவர் பிரபாகரன் ஆயுதப்போராட்டமூலம் தமிழீழத்தை பெறுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது ஆனால் என்ன நடந்து உலக கூட்டுச்சதியால் கடந்த 2009 மே 18ம் திகதியுடன் ஆயுதப் போர் மௌனமானது,விடுதலைப்புலிகளின் தியாகம் இன்று சர்வதேச மயப்படுத்தலில் எமது தமிழ்தேசிய அரசியல் சென்றுள்ளது அந்தப்பெருமை விடுதலைப்புலிகளையே சாரும் தற்போது தமிழ்தேசியகூட்டமைப்பு இராஐதந்திர அரசியல் செயற்பாட்டை சம்பந்தன் ஐயா தலைமையில் முன்எடுக்கின்றது ஐனாதிபதி தேர்தலில் மைத்திரி ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் ஆட்சிமாற்றம் 2015,ஏற்பட்டபின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ளவும் அதனூடக வடகிழக்கு இணைந்த சமஷ்டியடிப்படையிலான தீர்வுக்காகவும் சர்வதேசத்தின் ஊடக இலங்கை அரசை வலியுறுத்தக்கூடிய சில நகர்வுகள் இடம்பெறும் வேளையில்தான் சம்பந்தர் ஐயா நம்பிக்கையின் அடிப்படையில் 2016 ஆண்டுக்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் என காலக்கேடுகூறினார்.

அனால் உண்மையில் அதுநடக்கவில்லை இருந்தும் புதிய அரசியல் யாப்பு திருத்தம் செய்வதற்கான முன்எடுப்புக்கள் இடம்பெற்றறுக்கொண்டிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. எப்போதுமே சிங்கள பேரினவாத தலைமைகள் தமிழ்தலைமைகளை ஏமாற்றிய வரலாறுகளை நாம் படித்துள்ளோம்,


தலைவர் பிரபாகரன் ஆயுதம் மூலம் வெற்றிகொள்ளாத்தை சம்பந்தன்ஐயா பேனா மூலமாக வெற்றிகொள்வாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தற்போது சர்வதேசநாடுகள் எமது தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு சில நம்பிக்கையை ஊட்டியுள்ளனர் சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளை அவதானிக்கின்றனர் தற்போது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளும் முயற்சி இடம்பெறுகின்றது அதில் எமது உரிமைகள் வழங்கப்படாவிட்டால் அடுத்தகட்டம் என்ன செய்யவது என்பதை தமிழ்தேசியகூட்டமைப்பு தலைமை எமக்கு பகிரங்கமாக அறிவிக்கும்வரை நாம் தற்போது அவதானமாக செயல்பட வேண்டும்.

அதுவரை சம்பந்தன் ஐயாவின் காலக்கேடு நீண்டு செல்லும் என்பதை நாம் உணர வேண்டும்.காலக்கேடுகள் கடந்த 69,வருடங்களாக ஒவ்வொரு வேளையிலும் தந்தைசெல்வாவாக இருக்கலாம் அமிர்தலிங்கமாக இருக்கலாம் தலைவர் பிரபாகரனாக இருக்கலாம் காலக்கேடுகள் கூறப்பட்டபோதும் அதை இனவாத சிங்களதலைமைகள் முறித்துக்கொண்ட வரலாறுகளை நாம் மீட்டும்பார்கவேண்டும்.சம்பந்தன் ஐயாவினால் ஒருவருடம் மட்டுமே காலக்கேடு கூறப்பட்டடது நாம் பலதலைவர்களால் 68,வருடங்கள் காலக்கேடுகளை பார்த்துள்ளோம்.     இருந்தும் தற்போதய புதிய அரசியல் யாப்பு அதனூடான அரசியல்தீர்வு என்ன செய்தி சொல்லப்போகின்றது என்பதை பொறுத்துப்பார்போம்.

கிழக்குமாகாண தமிழ்மக்களாகிய நாம் வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் அதுதான் எமதினத்திற்கான பலம் என்பதை மீண்டும் வலியுறுத்துவோம் எனவும் அரியநேத்திரன் மேலும் கூறினார்,

நடேசனை மறந்த மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள்

Read More